2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

உலக வங்கியினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 11 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் குறித்த கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாநகரசபையில் இடம்பெற்றது.

இதன்போது, உலக வங்கியின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பொறுப்பான ஆலோசகர் சரத் விக்ரமரத்ன மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலையிலான மாநகர சபை உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசதத்தில் 103 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வீதிகள், வடிகான்கள், கழிவகற்றல் செயற்திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாகர ஆணையாளர் கே.சிவநாதன் இதன்போது தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .