2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

மவேற்குடாவில் மருத்துவ முகாம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)


மட்டக்களப்பு,  போரதீவுப்பற்று பிரதேசத்தில் உள்ள முதியவர்களின் நன்மை கருதி மவேற்குடாவில் நடமாடும் மருத்துவ முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

மாவேற்குடா முதியோர் சங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைய களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையால் இந்த மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் தாதிய பரிபாலகர் சிவா, தாதிய உத்தியோகத்தர் சித்தார்த்தன் உட்பட பலர் இந்த மருத்துவ சேவைகளை வழங்கினர்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் இருந்து சுமார் 200 முதியோர்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவையை பெற்றுக்கொண்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .