2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக் கன்றுகள் விநியோகிக்கும்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டும் இரண்டாவது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டை முன்னிட்டும் 'தயட்ட செவன' தேசத்திற்கு நிழல் எனும் திட்டத்தில் மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் ஆகியோர் கலந்துகொண்டு மரக் கன்றுகளை வழங்கினர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், அரச திணைக்களங்கள், பொது நிருவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் என்பற்றுக்கென 825 கன்றுகள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தெரிவித்தார்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் கமநெகும வேலைத்திட்டத்தில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அலுவலக பிரிவில் மாவடிச்சேனைக் கிராமத்தில் அமைக்கப்பட்ட தாய் சேய் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 28 லட்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .