2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மதுபானசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்றில்   புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரி மட்டக்களப்பில் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  வேடர் குடியிருப்பு, புதுக்குடியிருப்பு, கிரான்குளம், காங்கயனோடை, தாழங்குடா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டக்களப்பு காந்திசிலைக்கு முன்பாகவிருந்து பேரணியாகச் சென்று மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச்செய்யுமாறு கோரும் மகஜர் ஒன்றையும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கையளித்தனர்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஏற்கெனவே 6 மதுபானசாலைகள் இயங்குகின்ற நிலையில், 7ஆவது மதுபானசாலை மண்முனைப்பற்றில்   திறக்கப்படவுள்ளது.  இந்த மதுபானசாலைக்கான அனுமதி இரத்துச் செய்யப்பட வேண்டும் எனவும் இம்மக்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், மதுபானசாலைகள் அதிகரிக்க அதிகரிக்க தங்களுக்கான பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றது.  இதனால் பிள்ளைகளின் படிப்பு வீணாகுகின்றன. குடும்ப வன்முறைகள் ஏற்படுகின்றன எனவும் தெரிவித்தனர்.

'7ஆவது மதுபானசாலை வேண்டாம்', 'மதுபானசாலைகளின் மாநகரமா மண்முனைப்பற்றுப் பிரதேசம்', 'நிறுத்து அனுமதியை'  போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். படங்கள்:-எம்.சுக்ரி,கே.எஸ்.வதனகுமார்

தொடர்புடைய செய்தி:

மதுபானசாலை விவகாரம்; ஏட்டிக் போட்டியாக ஆர்ப்பாட்டம்
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .