2021 ஜனவரி 20, புதன்கிழமை

நீரிழிவு தொடர்பான செயலமர்வும் இரத்தப் பரிசோதனையும்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


உலக நீரிழிவு தினத்தையொட்டி  நீரிழிவு  தொடர்பான செயலமர்வும் இரத்தப் பரிசோதனையும் காத்தான்குடியில் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

காத்தான்குடி ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் ஏற்பாட்டில் இச்செயலமர்வும் இரத்த பரிசோதனையும் நடைபெற்றன.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகத்தின் தலைவர் டாக்டர் எம்.எம்.ஹாதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பொது வைத்தியர்களான டாக்டர் எஸ்.சுந்தரேசன், டாக்டர் உதயகாந், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் எம்.சிறாஜ், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது சேவையை வழங்கினர்.

இதன்போது வைத்தியர்கள்  நீரிழிவு நோய் தொடர்பில் விளக்கமளித்தனர். அத்துடன், வருகை தந்தவர்களுக்கு இரத்தப் பரிசோதனையும் மேற்கொண்டனர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .