2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இழந்த வயற் காணிகளை மீளவும் பெற்றுத் தருமாறு விவசாயிகள் கோரிக்கை

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


நாட்டில் நிலவிய யுத்த காலத்தில் வயற் காணிகளை இழந்த வாழைச்சேனை பிரதேச விவசாயிகள் தமது வயல் நிலங்களை மீளவும் பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண விவசாய, கால்நடை உற்பத்தி அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத்திடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.

இந்த காணிகளின் உரிமையாளர்கள் ஏறாவூரிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் அண்மையில் அமைச்சரை சந்தித்த போதே மேற்படி வேண்டுகோளினை விடுத்தனர்.

காணி உரிமையாளர்களின் மேற்படி பிரச்சினை தொடர்பிலான ஆவணங்களைப் பார்வையிட்ட  அமைச்சர், இது தொடர்பில் உடனடியாக சம்மந்தப்பட்டவர்களுடன் பேசுவதோடு, குறித்த நபர்கள் இழந்த காணிகளை மீளவும் பெற்றுத்தறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

யுத்தம் நிலவிய காலப் பகுதியில் காணி உரிமையாளர்கள் தமது வயல் நிலங்களுக்குச் சென்று நெற் செய்கையில் ஈடுபட முடியாமல் இருந்ததை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட சிலர், குறித்த காணிகளை அபகரித்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான காணிகளையே மீட்டுத் தருமாறு காணி உரிமையாளர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .