2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

ஆசியமன்ற பிரதிநிதிகள் - காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சந்திப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


ஆசியமன்ற பிரதிநிதிகளுக்கும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்குமிடையிலான சந்திப்பு காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆசியமன்றம் கிழக்கு மாகாணத்தில் சமயங்களுக்கிடையில் மேற்கொள்ளவுள்ள கலந்துரையாடல், சமயத் தலைவர்களுக்கான பயிற்சிப்பட்டறை போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.

இச்சந்திப்பில் ஆசியமன்றத்தின் சார்பில் ஆசியமன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி  கீத்தார் சபர்வா, ஆசியமன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் றிசாட் சரீப்,  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சார்பில் அதன் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.ஏ.ஜவாத், காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமாசபையின் பிரதிநிதிகள்,  சம்மேளன முக்கியஸ்தர்கள்,  உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .