2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாகரையில் நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஸரீபா)


2013ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்கள் தோறும் நடமாடும் சேவை நடத்தப்படுகின்ற நிலையில், ஒன்பதாவது நடமாடும் சேவை வாகரை பிரதேச செயலகப் பிரிவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சமாதானத்துக்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்து இந்த நடமாடும் சேவையை நடத்தியது.

காலம் கடந்த பிறப்பு, இறப்பு பதிவு, திருமணப்பதிவுச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பம், புதிய மற்றும் காணமல் போன தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பம் ஆகியவற்றுடன் காணிப் பிரச்சினைகளுக்கான முறைப்பாடுகள், பொலிஸ் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அத்துடன்,  சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இதேவேளை, சமூக சேவைகள் திணைக்களத்தால் தெரிவுசெய்யப்பட்ட அங்கவீனர்களுக்கு  உபகரணங்கள் வழங்கப்பட்டன. வேல்ட்விஷன் நிறுவனத்தால் 27 அங்கவீனர்களுக்கு தொழில் முயற்சிக்காக 10,000  ரூபா வழங்கப்பட்டன.

விண்ணப்பங்களுக்கான முத்திரைக் கட்டணம், அடையாள அட்டைக்கான புகைப்படம் என்பற்றை சமாதானத்துக்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவை யு.எஸ்.எயிட்டின் உதவியுடன் வழங்கியது.

இந்த நடமாடும் சேவையில் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 12 கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக  செயலாளர் கே.விமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.நேசராசா, கிழக்கு மாகாண காணி ஆணையாளர் இசான் விஜயதிலக, சமாதானத்துக்கும் அமைதிக்குமான அமைப்புக்களின் பேரவையின் இணைப்பாளர் பி.ஜெயபாரதி ஆகியோர் இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்துவைத்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .