2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி,ஐதுசன்)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த தாதியர்கள் அந்த வைத்தியசாலைக்கு முன்பாக சுமார் இரண்டு மணிநேர பணிப்பகிஷ்கரிப்பிலும் ஆர்ப்பாட்டத்திலும் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஈடுபட்டனர்.

கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற அரசாங்க தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கையின்போது பங்குபற்றிய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் சிலரை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி 7இல் கடமையாற்றும் வைத்திய நிபுணர் ஒருவர் அவமதித்து அவர்களுக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றை வேண்டுமென்று சமர்ப்பித்தமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தெரிவித்தனர்.

'தாதியர் சேவையை அவமதிக்காதே', '7ஆம் மகப்பேற்று விடுதியின் பிரச்சினையை உடனடியாக  தீர்த்துவை', 'தாதி சேவை அடிமையான சேவையல்ல', 'தாதி சேவை உன்னதமானது, 'தாதியர் புறக்கணிப்பை உடன் நிறுத்து', 'தாதியர் சேவையை அவமதிக்காதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஆப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .