2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வாகன விபத்தில் இளைஞர் பலி

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஐதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார். 

பட்டிருப்பைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை நிரஞ்சன் (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

நேற்று புதன்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இவ்விளைஞர்  லொறியுடன் மோதுண்ட நிலையில் தூக்கியெறியப்பட்டதில்  வானுடன் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .