2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

கூரையிலிருந்து விழுந்து வயோதிபர் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 05 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வீட்டுக் கூரையிலிருந்து கீழே தவறி விழுந்த நிலையில்  சிகிச்சை  பெற்றுவந்த வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று – 6, அலியார் மரைக்கார் வீதியைச் சேர்ந்த அப்துல் காசிம் அப்துல் அஸீஸ் (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீட்டுக் கூரையிலிருந்து தவறி விழுந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.

பாழடைந்த வீடுகளை இடித்து துப்புரவு செய்கின்ற தொழிலைச் செய்கின்ற இவர், சம்பவ தினமான கடந்த 29ஆம் திகதியும்  பழைய வீடு ஒன்றின் கூரையிலேறி அதனைக் கழற்றிக்கொண்டிருந்தபோது தவறிக் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் உடனடியாக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.  கண்டி வைத்தியசாலையிலிருந்து இவர் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு இவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .