2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஏறாவூர் பொலிஸ் பரிசோதனை

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 07 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸாரின் பொலிஸ் பரிசோதனை செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காஞ்சன கொடகொம்பர தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் இப்பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.அஜந்த சமரகோன், ஏறாவூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் அனந்த ரத்னசூரிய ஆகியோர் பொலிஸ் பரிசோதனை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் அணிவகுப்பு, சீருடை உட்பட பல விடயங்கள் தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு விளக்கமளிக்கபட்டன.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திலுள்ள வாகனங்களும் இதன்போது பரிசோதனை செய்யப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X