2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

தீயில் எரிவடைந்த வயோதிபர் மரணம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணிப் பகுதியில்; தீயில் எரிந்த வயோதிபரொருவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு   உயிரிழந்துள்ளார்.

சவரி பொன்னுத்துரை (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவர்.

கடந்த திங்கட்கிழமை இவர் தனது குடிசையினுள் தீ மூட்டி குளிர் காய்ந்துள்ளார்.  இதன்போது மிகவும் பதிவாகவும் ஓலையிலான கூரையையும் கொண்டமைந்துள்ள இக்குடிசை திடீரென தீ பிடித்தது. இத்தீயில் அகப்பட்டுக்கொண்ட வயோதிபர் எரிகாயங்களுக்குள்ளான நிலையில் அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். 

உடனடியாக செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவ்வயோதிபர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--