2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

நடமாடும் பொலிஸ் நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 10 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எஸ்.வதனகுமார்


பொலிஸ் திணைக்களத்தின் 21நாள் விசேட வேலைத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கான வவுணதீவுப் பொலிஸ் நிலையத்தின் நடமாடும் பொலிஸ் சேவை நிலையம் புதுமண்டபத்தடியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.

வவுணதீவுப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிலங்க பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெவன சில்வா கலந்துகொண்டு இந்நிலையத்தினை திறந்துவைத்தார்.

21 நாட்கள் செயற்படும் இந்நிலையத்தினுடாக சிவில் பாதுகாப்புக் குழுக்கள், கிராம அமைப்புக்களை இணைத்து கல்வி, சுகாதாரம், விளையாட்டு, சிரமதானம் எனப் பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில். மண்முனை மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் கா.சுப்பிரமணியம் புதுமண்டபத்தடி வைத்தய அதிகாரி நடராசா பொலிஸ் பரிசோதகர் எம்.ஐ.உவைஸ், சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள், கிராம சேவை அதிகாரிகள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--