2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கல்குடா பொலிஸ் பிரிவில் நடமாடும் பொலிஸ் நிலையம்

Super User   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்

கல்குடா பொலிஸ் பிரிவில் நடமாடும் பொலிஸ் நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனையில் பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் பொலிஸ் சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்லும் செயற்திட்டத்தின் அடிப்படையிலேயே நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வரும்; இந்த செயற்றிட்டத்தின் பிரகாரம் கல்குடா பொலிஸ் நிலையத்தில் இந்த நடமாடும் நிலையம்  நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பேத்தாளைக் கிராமத்தில் அமையப் பெற்ற நடமாடும் பொலிஸ் நிலையத்தை வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரத்ன மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இந்நடமாடும் பொலிஸ் நிலையம் எதிர்வரும் 26ஆம் திகதி வரை பேத்தாளைக் கிராமத்தில் இருக்கும்.

இதன் போது சிவில் பாதுகாப்புக் குழுவும் பிரதேச அமைப்புக்களும் இணைந்து பிரதேசத்தின் சிரமதான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கலாச்சார நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், பாடசாலைகளுக்கிடையிலான விவாதப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளை நடாத்தவுள்ளதாக நடமாடும் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.ஓ.பி.புஸ்பகுமார தெரிவித்தார்.

இவ்வாறு நடமாடும் பொலிஸ் நிலையத்தினூடாக பிரதேசத்தின் தேவைகளை அடையாளம்கண்டு நிவர்த்தி செய்யும் போது பொது மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையிலான நல்லுறவை வளர்க்க முடியும் என்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லாள் செனவிரத்ன தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X