2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விவசாயிகளின் நிதி வள மேம்பாடு தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் நிதி வள மேம்பாடு தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மத்திய வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் தர்மகீர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், மட்டக்களப்பு மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஊகநாதன், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வங்கிகள், நுண்கடன் திட்ட அலுவலகங்கள் அதிகளவில் காணப்பட்டபோதும், அவை வழங்கும் கடன்கள் தொடர்பான தகவல்கள் மக்களுக்குச் சென்றடைவதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் அனுசரணையில் ஆராயப்பட்டன.

வங்கிகளான மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, கொமர்ஷியல் வங்கி, நேசன் ரஸ்ட் வங்கி, சமுர்த்தி உள்ளிட்ட வங்கிகளின் பிரதிநிதிகள், விவசாயப் பணிப்பாளர்கள், உத்தியோகஸ்தர்கள், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளெனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

விவசாயிகளுக்கென மத்திய வங்கியால் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றினைப்; பயன்படுத்துவதிலுள்ள பிரச்சினைகளை களைவதை  நோக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக இக்கூட்டம் நடைபெறுவதாக இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.வசியராஜ் தெரிவித்தார்.

மத்திய வங்கியால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளுடன் பெறும் கடன்களை செலுத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை வங்கிகள் எதிர்கொள்கின்றன. அவ்வாறான பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் விவசாயத் திணைக்களங்களையும் கமநல அமைப்புக்களையும் உள்வாங்கி நிலையான தொடர்ச்சியான செயற்பாட்டைக் கொண்டு செல்வதற்காக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதெனவும் அவர் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X