2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

மாவடியோடை ஆற்றுக்கு மேலாகவுள்ள பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்

 
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாவடியோடை ஆற்றுக்கு மேலாகவுள்ள பாலம் சேதமடைந்த நிலையில் அதனை தற்காலிகமாக புனரமைப்பதற்கான வேலைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஆராய்வதற்காக ஏறாவூர்ப்பற்று - செங்கலடி பிரதேச செயலாளர் யு.உதயசிறிதர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எட்வின் கிருஷ்ணானந்தராஜா, மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.மோகன்ராஜா, உறுகாமம் பிரிவுக்கான பொறியியலாளர் நிரோஜன் ஆகியோர் நேற்று சனிக்கிழமை சென்று சேதமடைந்த இப்பாலத்தை பார்வையிட்டனர்.
 
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பெரிய ஆறுகளில் ஒன்றான மாவடியோடை ஆற்றுக்கு மேலாக புதிய பாலம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. 

இது இவ்வாறிருந்த தற்போதைய மழையால் ஏற்பட்ட  வெள்ளத்தினால் ஏற்கெனவே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இப்பாலம் சேதமடைந்துள்ளது. இந்நிலையிலேயே இதற்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .