2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிறுவர் குழுக்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.லோஹித்


கிழக்கிலங்கை கொருளாதார அபிவிருத்தி நிறுவனமாக எகெட் -கரித்தாஸ் நிறுவனத்தில் இயங்கி வரும் உளவளப் பிரிவின் சிறுவர் குழுக்களுக்கான விளையாட்டு உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி வேலூர், திருச்செந்தூர் ஆகிய இடங்களிலுள்ள சிறுவர் குழுக்களுக்கே இந்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் எகெட்-கரித்தாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் உளவளப்பிரிவு பொறுப்பாளர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இவ் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

எகெட்-கரித்தாஸ் நிறுவனத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில், இவ்வாறான சிறுவர் குழுக்கள் இங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--