2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை ஆராயப்பட்டது.
 
இது தொடர்பான கூட்டமொன்று நேற்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமா திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் உட்பட பிரதேச செயலாளர் மற்றும் உதவி திட்டமிடல் அதிகாரிகள், திட்டமிடல் செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் மிகுதி வேலைகள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டதாக பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.முஹம்மட் சஜி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--