2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு இரத்ததானம்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
சிறைச்சாலைகள் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை இரத்ததானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
 
இந்த இரத்ததானம் வழங்கும் ஆரம்ப வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கே.கித்சிறி பண்டார, சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் ஆர்.சிறினிவாசன் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் ஆர்.மோகன்ராஜ் உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கி வைத்தியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளும் சிறைச்சாலையை சுற்றியுள்ள பொதுமக்களும் இந்த இரத்ததானத்தில் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
 
கடமை நேரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் ஆத்மா சாந்திக்காக இந்த இரத்ததானம் நடைபெற்றதாக மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர் ஆர்.சிறினிவாசன் தெரிவித்தார். சிறைச்சாலைகள் தினம் 16.7.2013 என்பது குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--