2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

முதலுதவி முகாம்

Kogilavani   / 2013 ஜூலை 21 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் முதலுதவி முகாம் ஒன்று நேற்றைய தினம் ஆரம்பமாகி இன்றுடன் நிறைவடைந்தது.

தாந்தாமலையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி மற்றும் சுகாதாரக் குழுவினைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 35 முதலுதவித் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் தாந்தாமலை கிராமம் வாழ் மக்களுக்களின் வீடுகளுக்கு தொண்டர்கள் நேரடியாகச் சென்று முதலுதவி தொடர்பான விளக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கினர்.

இறுதியில் நேற்று இரவு தொண்டர்களின் அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றதோடு பாசறை நிகழ்வு ஒன்றும் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளை தலைவர், செயலாளர், பொருளாளர், ஆகியோர் உட்பட முதலுதவிப் போதனாசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--