Janu / 2025 நவம்பர் 05 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டில் தனது அறையில் நிர்வாணமாக இருந்து, பல்வேறு தொலைபேசி எண்கள் மூலம், இளம் பெண்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மேற்கொண்ட இளைஞனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, கந்தானை பகுதியில் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த நிலையில் குறித்த வீட்டின் கழிப்பறையில் மறைந்திருந்த 22 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளதுடன் இதன்போது சந்தேக நபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பல சிம் கார்டுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இளைஞன் நீண்ட காலமாக இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றிய தொலைபேசியின் பகுப்பாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago