2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பெருநாள் முற்பணம் வழங்க நடவடிக்கை

Super User   / 2013 ஜூலை 24 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டு. மாவட்டத்தில் கடமையாற்றும் முஸ்லிம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நோன்பு பெருநாளை முன்னிட்டு ஆகஸ்ட் மாத சம்பளத்தை முற்படுத்தி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சுற்று நிரூபத்திற்கமைவாக ஆகஸ்ட் மாத சம்பளத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் முஸ்லிம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு பெருநாள் முற்பணமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பெருநாள் முற்பணத்தினை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம் தெரிவித்தார். பெருநாள் முற்பணமாக 5,000 ரூபா விண்ணப்பித்தவர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .