2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

போஷாக்கு மாத விழிப்புணர்வு பேரணி

Suganthini Ratnam   / 2013 ஜூலை 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


போஷாக்கு மாதத்தை முன்னிட்டு வாகரை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் போஷாக்கு விழிப்புணர்வு பேரணியும் கர்பிணித் தாய்மார்களின் போஷாக்குத் தொடர்பான கண்காட்சியும் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

வாகரை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.பி.திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியானது கன்டலடி அருந்ததி வித்தியாலயத்திற்கு முன்பாக  இருந்து ஆரம்பமாகி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை வந்தடைந்தது. இதன் பின்னர் அங்கு பாடசாலை மாணவர்களுக்கும் கர்ப்பிணித்; தாய்மார்களுக்குரிய  போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வு கண்காட்சியும் நடைபெற்றது.

வேல்ட்விஷன் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--