2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

கிணறுகள் கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜூலை 29 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


களுவாஞ்சிக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தினால் அமைக்கப்பட்ட குடிநீர் கிணறுகளின் திறப்பு விழா நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை களுவன்கேணியில் நடைபெற்றது.

அருள் திரு பங்காரு அடிகளாரின் 73ஆவது அவதாரத் திருநாளை முன்னிட்டு மட்டக்களப்பு களுவன்கேணியில்  குடிநீர்க் கிணறுகள் அமைக்கும் திட்டம் கடந்த 2012 இல்; ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிணறுகள் அமைக்கம் பணி நிறைவுற்றுள்ள நிலையில் கிணறுகளின் திறப்பு விழா நிகழ்வும்  களுவங்கேணி கேணியடி கிராமத்தில் இடம்பெற்றது.

இதன்போது ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பெயர்பலகையை திறந்து வைத்ததுடன்.

திருக்கேதீஸ்வர சிவன் அருள் இல்லத்தின் லண்டன் கிளைத் தலைவர் டாக்டர் நமசிவாயம் பிரதேச மக்களிடம் குடிநீர்க் கிணறுகளை கையளித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--