2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

புதிய காதி நீதிபதி சத்தியபிரமானம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கு புதிய காதி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலவி எஸ்.எம்.அலியார் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் வைத்து சத்தியப்பிரமானம் செய்து தனது காதி நீதிபதி பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதியுமான ஏ.எம்.றியாழ் முன்னிலையில் புதிய காதி நீதிபதி சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள காத்தான்குடி காதி நீதிமன்றத்திற்கான புதிய காதிநீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவரும், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் பிரதி அதிபரும், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமாவின் தலைவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--