2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன். எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்
, ரீ.எல்.ஜவ்பர்கான்

திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கற்கைகள் நிலையத்தின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. கற்கை நிலையத்தில் நடைபெற்றுவரும் 11 கற்கைகளை பூர்த்திசெய்த மாணவர்க்கே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டன.

திறந்த பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய கற்கைகள் நிலையத்தின் தலைவரும் கிழக்கு
பல்கலைக்கழகத்தின் இயற்கை விஞ்ஞான பீடத்தின் தலைவருமான எஸ்.எஸ்.இக்பால் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ஜி.எப்.இராஜேந்திரா கலந்துகொண்டார்.

இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கற்கைகளை நிறைவு செய்த 180 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--