2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மூங்கிலாறு பாலத்தை புனரமைக்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பிரசேத்தில் வெள்ளத்தால் முற்றாக சேதமடைந்த மூங்கிலாறு பாலம் முழுமையாக புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட வரைபுகள் நீர்ப்பாசன அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் ஊடக இணைப்பாளர் வி.ஜீவானந்தம் தெரிவித்தார்.

மண்டூர் பிரதேச மக்களின் பிரதான போக்குவரத்துக்குரிய பாலமான  மூங்கிலாறு பாலம் சேதமடைந்ததால், அப்பகுதி விவசாயிகள் உட்பட சகலரும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் முயற்சியின் காரணமாக இப்பாலம் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
புனரமைக்கப்படவுள்ள மூங்கிலாறு பாலத்தை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர்

நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மாலை நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன், இப்பாலத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பிலும்; விரிவாக ஆராய்ந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X