2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

விக்கிரகங்கள் உடைக்கப்பட்டமைக்கு கண்டனம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல்-சக்திவேல்

மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீ சர்வாத்த சித்தி விநாயகர் ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு அதன்கீழ் வைக்கப்பட்டிருந்த தங்க யந்திரத் தகடுகள் திருடப்பட்ட சம்பவத்திற்கு 'நாம் இந்துக்கள்' அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

'குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களையும் அதன் பின்னின்று செயற்படுபவர்களையும் தீவிர விசாரணைகளினூடாக சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் இந்துக்கள் மத்தியில் இது பெரும் அச்சத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்துவதுடன் ஆலயங்களின் பக்தித் தன்மைக்கும் பெரும் பாதிப்பினையும் ஏற்படுத்தும்.

இது தொடர்பில் 'நாம் இந்துக்கள்' அமைப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபதிரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

குறித்த சில காலமாக இந்து ஆலயங்கள், பெரியார்களின் திருவுருவச் சிலைகளின் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது.
இந்த நிலை இச்சம்பவங்கள் எதேச்சையாக நடைபெறுவதாக தட்டிக் கழிக்க முடியாது. திட்டமிட்ட சிலரின் செயற்பாடாக  இவை அமைந்துள்ளமை   வெளிப்படையான உண்மை.

ஆனால், இந்த திட்டமிட்ட செயல்கள் எந்த நோக்கத்திற்காக மேற்கொள்ளப் படுகினறது என்பதனை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு சமூக ஒற்றுமையின் தேவைகருதி பொலிஸாரின் விசாரணையின் வெளிப்பாடுகளிலேயே தங்கியுள்ளது.

இந்து சமூகம் இவ்வாறான சூத்திரதாரிகளின் நிலைகளில் அவதானமாக கூரிய பார்வையுடன் செயற்பட வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு அதன்கீழ் வைக்கப்பட்டிருந்த தங்க யந்திரத் தகடுகள் களவாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--