2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கல்லடி புனித அந்தோனியார் ஆலயம் திறப்பு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தின் நிர்மாண வேலைகளுக்காக உடைக்கப்பட்ட கல்லடி புனித அந்தோனியார் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை மாலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னைய்யா இந்த புதிய ஆலயத்தின் கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த வைபவத்தில் இன்னாசியார் ஆலயத்தின் பங்குத்தந்தை ஜீவன் ஜீராஜ், அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன், அருட்தந்தை ரமேஸ் கிறிஸ்டி, அருட்தந்தை ஏ.தேவதாசன் உட்பட பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னைய்யா திருப்பலியை நடாத்தி அதை ஒப்புக்கொடுத்தார்.

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்தின் நிர்மாண வேலைகளுக்காக பிரதான வீதியிலிருந்த புனித அந்தோனியார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--