2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இளைஞரை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

களுவாஞ்சிகுடி, பெரிய கல்லாறு கிராமத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவரைக் காணவில்லை என களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.குறித்த இளைஞனின் பெற்றோரினாலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரிய கல்லாறு முதலாம் குறிஞ்சி பிள்ளையார் கோயில் வீதியினைச் சேர்ந்த 17 வயதான வடிவேல் ருவேந்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இவர் தமது வீட்டிலிருந்த வேளையில் கடந்த 20ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--