2021 மார்ச் 04, வியாழக்கிழமை

காத்தான்குடியில் மரக்காலை தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 28 , மு.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரி.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதான வீதியிலுள்ள மரக்காலையொன்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை தீக்கிரையாகியுள்ளதாக அந்த மரக்காலையின் உரிமையாளர் தெரிவித்தார்.  

இதனால், 50 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இம்மரக்காலை முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளதுடன், இங்கிருந்த  சிறிய லொறியொன்றும் மரங்களும் தீக்கிரையாகியுள்ளன.

இம்மரக்காலை  தீப்பற்றி எரிவதைக் கண்ட இப்பிரதேசவாசிகள்,   இம்மரக்காலையின் உரிமையாளருக்கும்;பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து, இம்மரக்காலையின் உரிமையாளருடன் இணைந்து பிரதேசவாசிகள்  தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இத்தீ விபத்து தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .