2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

தமிழ் மொழி சேர்த்துக் கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டும்

Kogilavani   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


'அரச கரும செயற்பாடுகளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி சேர்த்துக் கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டும்' என மட்டக்களப்பு மாவட்ட சர்வமத இன அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத இன அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சர்வ இன அமைப்பின் தலைவர்களான கரிதாஸ் எகெட் அமைப்பின் தலைவர் அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோன் மற்றும் சிவ ஸ்ரீ சிவபாலன் குருக்கள் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே மேற்படி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கலந்துரையாடலில் அரச கரும செயற்பாடுகளில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மொழி சேர்த்துக் கொள்ளப்படுவது கட்டாயமாக்கப்படவேண்டும். மொழிப்பிரச்சினையே அனைத்து பிரச்சனைகளுக்கும் அடித்தளமாக இருக்கின்றது இதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில், ஏறாவூர் ஜம்மியத்துலமா சபையின் தலைவர் பரீட் மௌலவி, மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்பின் உறுப்பினர் சோமசுந்தரம், மட்டக்களப்பு இணையம் அமைப்பின் உபதலைவர் கமலதாஸ், மட்டக்களப்பு மாவட்ட மத்தியஸ்த சபைத் தலைவர் விஷ்னுமூர்த்தி ஆகியோருடன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முஸ்லீம்; கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் நிகழ்ச்சித் திட்டமிடல் அலுவலகர் சுரேஸ்குமார் கலந்துகொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .