2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தாலிக்கொடியை பறிக்க முயன்றவர் மடக்கி பிடிப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு தாண்டவன்வெளி பகுதியில் பெண்ணொருவரின் தாலிக்கொடியினை பறித்துச்செல்லமுற்பட்ட,ஒருவரை குறித்த பெண் மடக்கிப்பிடித்த சம்பவம் வியாழக்கிழமை (3) இரவு இடம்பெற்றுள்ளதாக தாண்டவன்வெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாண்டவன்வெளி பற்றிமா பகுதியில் குடியிருக்கும் இரு பெண்கள் கடைக்குசென்று வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளை,மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் இரு பெண்களில் ஒரு பெண்ணின் தாலிக்கொடியை அறுத்து செல்ல முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த பெண் திருட முற்பட்டவரை இழுத்து பிடித்து தாக்கியுள்ளார்.இருந்தும் அப்பெண்ணை தாக்கிவிட்டு பிடிப்பட்டவர் தப்பியோடியுள்ளார்.

பெண்கள் சத்தமிடுவதை கண்ட அருகில் இருந்த இளைஞர்கள் கொள்ளையனை துரத்த தொடங்கியவுடன் ஓடியவர் அங்குள்ள ஓர் வீட்டின் மலசலகூடத்துக்குள் ஒளிந்துள்ளார்.

எனினும் அதனைக்கண்ணுற்ற இளைஞர்கள் அவனை மடக்கிப்பிடித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சிவில் பாதுகாப்பு குழு தலைவர் ராஜன் தலைமையிலானோர் குறித்த நபரை  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஓட்டமாவடியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .