2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

மோட்டார் குண்டு மீட்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள வெபர் விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

விளையாட்டு மைதான கட்டிடத் தொகுதி  நிர்மாண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இந்தக் குண்டைக் கண்டு பிடித்தனர்.

அருகிலுள்ள கட்டிடக் குப்பைகளைக் பயன்படுத்தி   ஏற்கெனவே தோண்டப்பட்ட கிணற்றின் குழியை மூடும் வேலைகளில் தாம் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்தக் குண்டைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக கட்டிட நிர்மாணத் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குண்டு செயலிழக்கச் செய்யும் படையினர் வரவழைக்கப்பட்டு இந்தக் குண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.

இந்த வெபர் மைதானம் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் இராணுவத் தலைமையகமாகவும் படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகவும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .