2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

திவிநெகும பயனாளிகளுக்கு ரட்டவிருவோ கடன்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகளுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் சமூர்த்தி சமூக அபிவிருத்தி மன்றமும் இணைந்து 'ரட்டவிருவே கடன்' வழங்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், திவிநெகும (வாழ்வின் எழுச்சி) புதுவருட சந்தை, செவ்வாய்க்கிழமை (08) வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த கடன் உதவிகள் வழங்கட்டன.

இதன்போது, ஒரு பயனாளிக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் 5 பயனாளிகளுக்குமாக மொத்தம் 15 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது என போரதீவுப்பற்று பிரதேச சமூர்தி வலய முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும் போரதீவுப்பற்று பிரதேசத்தில் கல்வி கற்கின்ற வறிய நிலையிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு சப்பாத்துக்கள் வழங்கப்பட்டதோடு, 150 திவிநெகும பயனாளிகளுக்கு தலா 5000 ரூபா வீதம் 750,000 ரூபா நிதி நுண்கடன்களாகவும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--