2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

சமூக சீர்திருத்த குழு அங்குரார்ப்பணம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 09 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்,க.ருத்திரன்

மஹிந்த சிந்தனையின் பிரகாரம்; புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் பிரதேச செயலக மட்டத்தில் சமுக சீர்திருத்த குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளில் ஏற்படும் நெருக்டிகள், செலவினங்கள்; மற்றும் குற்றவாளிகளைக் குறைக்கும் நோக்குடன் இந்த சமுக சீர்திருத்தக் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சமுக சீர்திருத்த குழு அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (09) கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு நீதிமன்ற சமுதாயம்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் எஸ்.தயானந்தன், கோறளைப்பற்று பிரதேச செயலக சமுதாயம்சார் அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.சுதாராஜ் மற்றும் சமுக சீர்திருத்த குழுக்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--