2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வாகரையில் புதுவருடச் சந்தை

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


சித்திரை புத்தாண்டையொட்டி வாகரை பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்கள பிரிவைச் சேர்ந்தவர்களின் ஏற்பாட்டில், புதுவருடச் சந்தை  வாகரை மத்தி கிராம அலுவலகர்; பிரிவில் வியாழக்கிழமை (10) திறந்து வைக்கப்பட்டது.

வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்ணம், வாகரை பிரதேச செயலக உதவித்திட்டப் பணிப்பாளர் வீ.நவிரதன், இரணுவ, பொலிஸ் அதிகாரிகள்; கலந்துகொண்டனர்.

வாரத்தில் ஒரு நாள் திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யும் இடமாக இச்சந்தை செயற்படும் என வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X