2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

படகுப்பாதைகள் சேவையிலிருந்து நிறுத்தம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வாவியூடாக இதுவரை காலமும் சேவையில் ஈடுபட்டுவந்த 02  படகுப்பாதைகளும் தற்போது சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  சனிக்கிழமை (19) திறந்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து இப்படகுப்பாதைகள் மண்முனை வாவியின் அருகே நிரந்தரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் மண்முனை வாவியினூடாக படகுப்பாதைகள் சுமார் 25 வருடங்களாக சேவையில் ஈடுபட்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுசரணையுடன் தினமும் சேவையில் ஈடுபட்டுவந்த 02 படகுப்பாதைகளும் மக்கள்,    வாகனங்கள் உள்ளிட்டவற்றை ஏற்றிச்சென்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X