2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: இளைஞனுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கோட்டைக்கல்லாறில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்தபோது 15வயதுடைய சிறுமி 18 வயது இளைஞரால் வியாழக்கிழமை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக குறித்த சிறுமியின் பெற்றோரால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து கோட்டைக்கல்லாறை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்டு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவான் முகமட் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது அந்த இளைஞனை எதிர்வரும் மே மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .