2021 ஜனவரி 20, புதன்கிழமை

தேன் எடுக்க சென்றவரை கடித்துக் குதறிய கரடி

Super User   / 2014 ஜூலை 02 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டான்குளம் காட்டுப்பதியில் தேன் எடுப்பதற்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் இன்று (02) காலை கரடிக் கடிக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்டுமுறிவு  ஆண்டாங்குளத்தைச் சேர்ந்த மனுக்கன் சிவக்கொழுந்து (வயது 64) என்ற எட்டு பிள்ளைகளின் தந்தையே  இவ்வாறு கரடிக் கடிக்கு உள்ளாகியுள்ளார்.

தனது ஜீவனோபாயத்திற்காக தேன் எடுத்து வியாபாரம் செய்யும் குறித்த நபர், இன்று காலை 08.00 மணியளவில் ஆண்டாங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற வேளையே கரடி இவரை கடித்துள்ளதாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்தார்.

காயப்பட்டவர் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .