2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி

Kogilavani   / 2014 ஜூலை 04 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மாணவர்களிடத்தில் ஆக்கத்திறனை வளர்க்கும் நோக்கொடு பெற்றேர்களின் உதவியுடன் ஆக்கப்பட்ட கைப்பணிப் பொருட்களின் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கோட்டைமுனை புனித செபஸ்தியார் தமிழ் வித்தியாலய மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான ஆக்கத்திறன் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பாடசாலை அதிபர் எம்.யோகேந்திரன் தலைமையில் ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். சச்சிதானந்தம் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

கொய்கா, நிறுவனத்தின் தொழில் வளிகாட்டல் அதிகாரி ஏ.ஜெயநாதன், தேசிய அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் பிலிப் ராஜநாதன், ஆரம்பப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன், ஆரம்பப் பிரிவு சேவைக்கால ஆலோசகர்கள் எஸ்.பூபாலசிங்கம், ஐ.அருளம்பலம் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .