2021 ஜனவரி 23, சனிக்கிழமை

பேரீச்சம் பழங்கள் இன்னும் பகிர்ந்தளிக்கப்படவில்லையென விசனம்

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

புனித றமழான் நோன்பு காலத்தில் நோன்பாளிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்ட பேரீச்சம்பழங்கள் ஏறாவூரில் உள்ள பள்ளிவாசல்களுக்கு இன்னமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

நோன்பு ஆரம்பமாவதற்கு எட்டு தினங்களுக்கு முன்னராகவே அதாவது, கடந்த ஜூன் 20 ஆம் திகதியே இந்தப் பேரீச்சம் பழங்கள் பள்ளிவாசல்களுக்கு விநியோகிப்பதற்கென்று ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் நோன்பு தொடங்கி ஒருவாரம் கழிந்து விட்ட நிலையிலும் கூட இன்னமும் தங்களது பள்ளிவாசலுக்கு இலவச பேரீச்சம் பழங்கள் விநியோகிக்கப்படவில்லை என்று ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் முன்னாள் செயலாளரும் றிபாய் பள்ளி வாசல் தலைவருமான  யூ.எல். முஹைதீன்பாபா கூறினார்.

அதேவேளை காத்தான்குடி சம்மேளனத்திற்கு  முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட 5716 கிலோகிராம் பேரீச்சம் பழங்களை அந்த சம்மேளனம் நோன்பு தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிவாசல்களுக்குப் பகிர்ந்தளித்து விட்டது என்றும் முஹைதீன்பாபா தெரிவித்தார்.

ஏறாவூரில் 39 பள்ளிவாசல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஏறாவூரிலுள்ள பள்ளிவாசல்களுக்கு நாளை மறுதினம் ஞாயிறன்று (06) பிற்பகல் ஒரு மணிக்கு பேரீச்சம் பழம் விநியோகிக்க ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் மூலம் அறிவித்திருப்பபதாக ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் தெரிவித்தார்.

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் நிருவாகத் தெரிவில் ஏற்பட்ட இழுபறியே இந்த பேரீச்சம்பழ விநியோக தாமதத்தி;ற்குக் காரணம் என்று அவர் மேலும் சொன்னார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .