Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 ஜனவரி 31 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செங்கலடி, குமாரவேலியர் கிராமம், அம்மன்புரம் ஆகிய கிரமங்களில் உள்ள மிகமோசமான நிலையில் பாதிக்கப்பட்ட 107 குடிநீர் கிணறுகள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் இன்று (31) துப்புரவு செய்யப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராஜா தெரிவித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த கிணறுகளே இவ்வாறு சுத்தம் செய்யப்பட்டது.
இச்செயற்பாட்டுக்கு, அப்பகுதியின் சிரேஷ்ட சுகாதாரப் பரிசோதகர் எஸ். விஜயகுமார், பிரதேச சபையின் உத்தியோகஸ்தர் வி. ரவி, கிராம உத்தியோகஸ்தர் எஸ். பிரதீபா, கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்களான ரீ. கணேஷ், எம். யோகராஜா மாதர் சங்கத்தலைவி எஸ். திலகா ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் இச்சுத்திகரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025