2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தொழிற்துறை திணைக்களத்தின் கட்டடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 31 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா


கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு இன்று (31) திறந்துவைக்கப்பட்டது.


தொழிற்துறை திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் கிருஷ்ணபிள்ளை இளங்குமுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி  கால் நடைவள  அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில் மற்றும் சுற்றுலா துறை அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் மாகாண பணிப்பாளர் எல்.டி.கே.தென்னக்கோன், கணக்காளர் ஜீவிதன் , நிர்வாக உத்தியோகத்தர் திருமதி எஸ்.எம்.திராணி, இத்திணைகளத்திலிருந்து ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்கள், இடம்மாற்றம் பெற்று சென்றவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


இத்திணைக்களத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 50 நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் 30 நெசவு பயிற்சி நிலையம், 12 தும்பு பயிற்சி நிலையம், 3 தச்சு பயிற்சி நிலையம்,  01 மட்பாண்ட பயிற்சி நிலையம் மற்றும் ஐயங்கேணி சிறுகைத்தொழில் பேட்டை மற்றும் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் 3 விற்பனை நிலையங்கள் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .