2021 மே 06, வியாழக்கிழமை

சட்டவிரோத மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடிப் பிரதேசத்தில்    சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிவந்த  வாகனத்துடன் மரக்குற்றிகளை ஞாயிற்றுக்கிழமை (01) மாலை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் வாகன சாரதியை  கைதுசெய்ததாகவும்  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள மர ஆலைகளுக்கு சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மரக்குற்றிகளை கொண்டுவருவதாக தமக்கு தகவல்; கிடைத்தது. இதனைத் தொடர்ந்து,; சட்டவிரோத மரக்குற்றிகளுடன் வந்த  இந்த வாகனத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது,  6 அடி தொடக்கம் 7 அடிவரை  18  மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆனால்,  என்ன வகையான  மரக்குற்றிகள் என்பது தொடர்பிலும்  மரங்களின் பெறுமதி எவ்வளவு என்பதையும்  அறிவதற்கு வனஇலாக திணைக்களத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

போத்தானை காட்டுப்பகுதியிலிருந்து இந்த மரங்களை கொண்டுவந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில்; கைதுசெய்யப்பட்ட சாரதியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .