2021 மே 06, வியாழக்கிழமை

நகரசபையின் நிதி, நிர்வாக மோசடி தொடர்பில் முறைப்பாடு

Sudharshini   / 2015 பெப்ரவரி 01 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடி நகரசபையின் நிதி, நிர்வாக மோசடி தொடர்பிலான முறைப்பாடு ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஞாயிற்றுக்கிழமை (01) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளது.


காத்தான்குடி நகரசபையில் எதிர்கட்சி உறுப்பினராகக் கடமையாற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதி எஸ்.எச்.பிர்தௌஸ் இந்த முறைப்பாட்டை செய்யப்பட்டுள்ளார்.


காத்தான்குடி நகரசபையினால் அறவிடப்படும் ஆதன வரி தொடர்பில் இடம்பெற்றுள்ள நிதி நிர்வாக மோசடி தொடர்பிலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


காத்தான்குடி நகரசபையானது தமது நிர்வாக எல்லையில் வசிக்கும் வரி இறுப்பாளர்கள், கடந்த 31ஆம் திகதிக்கு முன்பாக தமது ஆதன வரியினை கட்டி முடிக்கவேண்டும் என்றும் அவ்வாறு கட்டப்படும் பட்சத்தில் 10மூ கழிவு வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது.


இதனைக் கருத்திற்கொண்டு, பெருந்தொகையான வரி இறுப்பாளர்கள் தமது ஆதனங்களுக்கான வரியினை கடந்த 30ஆம் திகதி காத்தான்குடி நகரசபைக்குச் செலுத்தி இருந்தார்கள். இருப்பினும் இந்தக் கொடுப்பனவுகளுக்கான பற்றுச் சீட்டினை வழங்கும்போது அவற்றில் பெப்ரவரி 2ஆம் திகதி என திகதியிடப்பட்டிருந்தது. இது தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடு  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கவனத்திற்கு நேற்றுக் கொண்டுவரப்பட்டிருந்தது.


பொதுமக்களின் இந்த முறைப்பாடு மற்றும் அவர்களால் வழங்கப்பட்ட இந்த ஆதாரங்கள் என்பனவற்றினைப் பரிசீலித்த நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி பிரதேச உயர் மட்டக் குழு, இது தொடர்பில் உடனடியாகச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என சனிக்கிழமை கூடிய கூட்டத்தில் தீர்மானித்தது.


இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மட்டக்களப்புப் பொலிசார் தற்போது ஆரம்பித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .