Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தளவாய்க்கிராம மக்களின் பொதுத்தேவைகளுக்காக இரண்டு தரைவிரிப்புக்கள் புதன்கிழமை (4) வழங்கப்பட்டன.
தளவாய்க்கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எஸ்.நவச்செல்வத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர் ஆலோசகர் எஸ்.கணேசலிங்கம், வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.நிவேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைத்தலைவர் ரீ.வசந்தராஜா,
'உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களினால் மக்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவு மட்டுமே வழங்கமுடியும் முன்னேற்றத்தை தரமுடியாது. மக்கள் தாங்களாகவே முன்னேறவேண்டும். ஒவ்வொருவர் மனதிலும் ஏழ்மையை வெல்லும் வைராக்கியம் வரவேண்டும். எப்போதும் அயலவர்; உதவவேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு முயற்சியுடன் கடுமையாக பாடுபட்டவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்.
சிக்கனத்தை கடைப்பிடிக்கமுடியாதவர்களும் வீண்செலவை கைவிடாதவர்களும் ஒருபோதும் முன்னேறமுடியாது. குpராம மக்களாலும் முன்னேறமுடியும். ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக உதவுங்கள். கிராமத்து அமைப்பை பலப்படுத்துங்கள். அந்த அமைப்பினூடாக வாழ்வை செம்மைப்படுத்துங்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
13 minute ago
18 minute ago