Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வுக்கு வருமாறு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும், தாம் கலந்துகொள்ளவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.சுமந்திரன் கலந்துகொண்டனர். இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர்கள் கலந்துகொண்டமை தொடர்பில் என்னால் எதுவும் தெரிவிக்கமுடியாது. அது அவர்களை பொறுத்த விடயம். ஆனால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025