Princiya Dixci / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் வெள்ளிக்கிழமை (06) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த எம்.எஸ்.எஸ். அமீர் அலி நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து அவரின் வெற்றிடத்துக்கு செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார்.
2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில்; போட்டியிட்ட செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இரண்டு தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.
ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்த இவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளருமாவார்.
இப்பதவிப்பிரமாண நிகழ்வில் கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் ஆரியவதி கலபத்தி, சட்டத்தரணி ஜே.எம். லாஹிர் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .